அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர்: அஜித்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர்: அஜித்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர் என்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்துக்கு இன்று (மே 1) 48-வது பிறந்த நாள். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். சமூகவலைத்தளத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment