என்.ஜி.கே’ படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம்? – ‘சர்காரா, நோட்டாவா?

என்.ஜி.கே’ படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம்? – ‘சர்காரா, நோட்டாவா?

என்.ஜி.கே’ இசை வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டது எந்தப் படம் என்று பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்ல்வி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே’. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

மே 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ( ஏப்ரல் 29) சென்னையில் நடைபெற்றது.இதில் படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது, படத்தின் தாமதத்திற்கான காரணத்தை பட்டியலிட்டார்.

அதில், செல்வராகவன் இக்கதையில் சில காட்சிகளை மாற்றி எழுதினார். ஏனென்றால், கடந்தாண்டு வெளியான ஒரு படத்தில் சில காட்சிகளும், கதைகளமும் ஒன்றுபோல இருந்தது என்று கூறினார் எஸ்.ஆர்.பிரபு

இவருடைய பேச்சை வைத்துக் கொண்டு, எந்த படம் என்று பலரும் விவாதித்து வருகிறார்கள். கடந்தாண்டு அரசியல் பின்னணியாக கொண்டு ‘சர்கார்’ மற்றும் ‘நோட்டா’ ஆகிய படங்கள் வெளியானது. இதில், ஏதோ ஒரு படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

முதலில் ‘சர்கார்’ மற்றும் ‘என்.ஜி.கே’ ஒரே நாளில் வெளியீடாக திட்டமிடப்பட்ட படம் தான். ஆனால் படம் தயாராக தாமதம் ஆனதால், ‘சர்கார்’ தனியாக வெளியானது குறிப்பிடத்தக்கது. ‘சர்கார்’ படம் இல்லையென்றால், கண்டிப்பாக ‘நோட்டா’ படத்துக்கு தான் வாய்ப்பு அதிகம்.

அப்படம் ஒரு இளைஞன் புதிதாக அரசியலுக்கு வந்து என்ன பண்ணுகிறான் என்ற பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். ’என்.ஜி.கே’ ட்ரெய்லரும் இதைப் போலவே இருப்பதால், ’நோட்டா’ தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், செல்வராகவன் இயக்கம் என்பதால் ஏதேனும் புதுமையாக இருக்கும் எனவும் நிச்சயமாக நம்பலாம்.

‘என்.ஜி.கே’ படக்குழுவோ இந்த விவகாரம் தொடர்பாக, எவ்வித கருத்துமே தெரிவிக்க முடியாத சூழலில் சிக்கியுள்ளது.

Leave a Comment