கோவில்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சிம்பு

கோவில்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சிம்பு

நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘கோவில்’. சோனியா அகர்வால், ராஜ்கிரண், நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்குப் பிறகு சிம்பு – ஹரி இருவருமே கூட்டணி சேரவில்லை.

தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிம்புவை சந்தித்து, தான் தயார்செய்த கதையைத் தெரிவித்துள்ளார் ஹரி. ‘கோவில்’ படம் போலவே, இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார் ஏ.எம்.ரத்னம். விரைவில் ‘மாநாடு’, ‘மஹா’ ஆகிய படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிம்பு.

ஆகையால், படப்பிடிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் முடிவானவுடன், இக்கூட்டணி இணைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. தம்பியின் திருமணத்துக்காக சென்னை திரும்பியுள்ள சிம்பு, விரைவில் பாங்காக் பயணப்பட இருக்கிறார். அங்கு உடம்பை இன்னும் குறைத்து, இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment