சரணின் இயக்கத்தில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சரணின் இயக்கத்தில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சரண் இயக்கத்தில் ஆரவ் நடித்து வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

வினய் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் இயக்குநர் சரண். ஆனால் அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார்.

ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர் உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பெரம்பூரில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (மே 1) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் ராதிகா தாதாவாகவும், அவரிடம் பணிபுரியும் ரவுடியாக ஆரவ்வும் நடித்துள்ளனர். சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்துக்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சுமார் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் படப்பிடிப்பை தீவிரமாக நடத்தி வருகிறது படக்குழு.

Leave a Comment