ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விருந்தினராக ராதிகா சரத்குமார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விருந்தினராக ராதிகா சரத்குமார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியில்,விருந்தினராக ராதிகா சரத்குமார்கலந்து கொண்டுள்ளார்.

சினிமாவில் மட்டுமின்றி, சீரியலிலும் பல வருடங்களாக முன்னணி நடிகையாகத் திகழ்பவர் ராதிகா சரத்குமார். தன்னுடைய ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் படங்கள், சீரியல்களைத் தயாரித்து வருகிறார்.

அவருடைய தயாரிப்பில் சன் டிவியில் ‘சந்திரகுமாரி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலிலும் ராதிகாதான் ஹீரோயினாக நடித்தார். ஆனால், தான் தொலைக்காட்சியில் இருந்து 60 நாட்களுக்கு ஓய்வு எடுப்பதாக சில நாட்களுக்கு முன்பு திடீரென அறிவித்தார்.

எனவே, ‘சந்திரகுமாரி’ சீரியலில் தற்போது ராதிகாவுக்குப் பதிலாக விஜி சந்திரசேகர் நடித்து வருகிறார். இதனால், ராதிகா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தொடக்கக் காலத்தில் இருந்தே சன் டிவி.யில்தான் ராதிகாவின் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன. எனவே, மற்ற தொலைக்காட்சிகளில் முகம் காட்டாமல் தவிர்த்து வந்தார் ராதிகா.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ஜூனியர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார் ராதிகா சரத்குமார். இந்தத் தகவலை, அவரே ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment