ஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு

ஜெர்சி’ படத்துக்கு நடிகை அனுஷ்கா பாராட்டு

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெர்சி’ படத்தை, முன்னணி நடிகையாக அனுஷ்கா பாராட்டியுள்ளார்.

கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜெர்சி’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முன்னணி நடிகையாக அனுஷ்கா, ‘ஜெர்சி’ படத்தை பாராட்டியுள்ளார். வழக்கமாகவே எந்தவொரு படத்தையும் அவர் மிகவும் பாராட்டியதில்லை. நீண்ட வருடங்கள் கழித்து ‘ஜெர்சி’ படத்தை அவர் பாராட்டியுள்ளது, படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஜெர்சி ‘ படம் தொடர்பாக தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அனுஷ்கா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

‘ஜெர்சி’ படம் குறித்து நான் சொல்ல நினைப்பதை சொல்வதற்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்காதோ என வேண்டுகிறேன். உண்மையிலேயே ஒரு ரசிகையின் வார்த்தைகள். உண்மையான அன்பின் வார்த்தை. நானி, கவுதம் தின்னனூரி, ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். நன்றி, நன்றி.

இவ்வாறு அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

தற்போது முழுமையாக உடல் இழைத்து மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். மாதவனுடன் ‘சைலன்ஸ்’ என்னும் படத்தில் ஹாலிவுட் நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார் அனுஷ்கா.

Leave a Comment