ஜோதிகா போலீஸாக நடித்துள்ள ‘ஜாக்பாட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

போலீஸ் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘குலேபகாவலி’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகாவை வைத்து படத்தை இயக்கியுள்ளார் கல்யாண். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சரியாகத் திட்டமிட்டு, 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர். இறுதிநாளில் சூர்யா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது படக்குழு.

இந்நிலையில், படத்தின் ஃபர்ட்ஸ் லுக்கை இன்று (ஏப்ரல் 20) வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ‘ஜாக்பாட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஜோதிகா, ரேவதி இருவரும் போலீஸாக நடித்துள்ளனர். காமெடிப் படமாக இது உருவாகியுள்ளது.

இதுதவிர, அறிமுக இயக்குநர்கள் இயக்கும் சில படங்களிலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ஜோதிகா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *