மறக்க முடியாத நாள்..! : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

மறக்க முடியாத நாள்..! : இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

பசங்க’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் பாண்டிராஜ் நன்றியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிஷோர், ஸ்ரீராம், விமல், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘பசங்க’. 2009-ம் ஆண்டு மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டிராஜ். இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருது வென்றது மட்டுமன்றி, 3 தேசிய விருதுகளையும் வென்றது.

இன்று (மே 1) ‘பசங்க’ படம் வெளியாகி 10 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு இயக்குநர் பாண்டிராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மே 1 மறக்க முடியாத நாள்..!

காலையில் எழுந்ததிலிருந்தே ஒரு இனம் புரியாத சந்தோஷம்.

’பசங்க’ பட ரிலீஸ் ஆன நாள்..! இன்றோரு 10 வருடம் ஆகிறது.

முதலில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடும் போது… ஒரு படத்திலாவது உதவி இயக்குநராக TITLE CARD..! வாங்கிவிட வேண்டும் என்று ஆசை..!

உதவி இயக்குநராகி .. 7 படங்கள் வேலைபார்த்த பிறகு, ஒரு படத்திற்காவது இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை..!!

இறுதியில், அந்தக் கணவு சசிகுமார் சார் மூலமாக நிறைவேறியது. ஆனால், உண்மையில் ’பசங்க’ படம் பண்ணும் போது இது முதல் படமாகவும், கடைசிப் படமாகவும் கூட இருக்கலாம் என்றே நினைத்தேன்..!

இதோ இன்று 10-வது வருடம்… 10-வது ஆண்டில் 9-வது படத்துடன்..

சேரன் சார், தங்கர்பச்சான் சார், சசிகுமார் சார், அசோக்குமார், கதிர், வாசு. எனது அனைத்துத் தயாரிப்பாளர்கள், பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் நண்பர்களாகிய நீங்கள்.. என அனைவருக்கும் நன்றி..!

இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment