மலையாள படத்தில் பயணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா திரையுலகில் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து நான்கு ஆண்டுகளை கடந்து விட்டார். இருந்தாலும் சர்கார் படத்தை அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த தமிழ் படமும் இதுவரை ரிலீஸாகவில்லை.

தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “மரக்கார்: அரபிகடலின்டே சிம்ஹம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வினித் ஸ்ரீனிவாசன் இயக்கும் புதுப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்று சொல்லப் படுகிறது. அந்த படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் தான் ஹீரோ. “மரக்கார்” படத்தில் பிரனவ் சிறு வயது மோகன்லாலாக நடித்திருக்கிறார். ஆனால் அவரும், கீர்த்தியும் எந்த ஒரு காட்சியிலும் இனைந்து நடிக்கவில்லை. இது தான் முதல் முறையாகராக மோகன்லாலுடன் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ் 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *